Breaking News
recent

ஹரமின் வளாகத்தில் புகை படங்கள் எடுப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் இஸ்லாமிய அறிஞர்கள் வேண்டுகோள்!



மக்கா மாநகரம் உலகில் மிக சிறந்த ஒரு திரு தலமாகும் இந்த புனித தலத்திர்கு இறுதி கடமையை நிறைவு செய்ய வரகுடியவர்கள் இறைஅச்சம் நிறைந்த மனதோடும் தமது ஹஜ் ஏற்று கொள்ள பட்ட ஹஜ்ஜாக இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடும் இருப்பதர்கு பதிலாக மொபைலோடும் கேமராவோடும் இருப்பதையும் விதவிதமாக புகை படங்களுக்கு போஸ் கொடுப்பதையும் பரவலாக மக்காவில் பார்க்க முடிவதாக பல அறிஞர் பெரு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்
தாம் ஹஜ்ஜின் கடமைகளை நிறைவு செய்வது போன்று புகைபடம் எடுப்பதும் அதை சமுக வலை தளங்களில் வெளியிடுவதும் அவர்களின் இறையச்சத்தை குறைத்து அவர்களின் வணக்கத்தை வீணாக்கி வீடுகிறது என்பதை அறியாமலேயே இந்த காரியத்தை செய்து கொண்டுள்ளனர்
எனவே ஹரமின் புனித த்தை பாது காப்பதர்காகவும் ஹஜ்ஜீக்கு வந்திருக்கும் புகைபட பைத்தியங்கள் தங்களை அறியமலேயே ஷைத்தான் அவர்களுள் குடி கொண்டு அவர்களின் அமல்களை நாச படுத்துவதை தடுப்பதர்காகவும் ஹரமின் வளாகத்தில் புகை படம் எடுப்பதர்கு சவுதி அரசு தடைவிதிக்க வேண்டும் என்று சவுதியை சார்ந்த பல அறிஞர்கள் உட்பட உலக நாடுகளை சார்ந்து பல அறிஞர்கள் வேண்டு கோள் விடுக்குள்ளனர் உண்மையில் இது பாராட்டுகுரிய வேண்டுகோளாகும்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.