Breaking News
recent

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாளே என்கிற வயிற்றெரிச்சலில் சகோதரி ரஹீமாவை (மோனிகா) இழிவுபடுத்தும் ஊடகங்கள்.


நதிகள் நனைவதில்லை படத்தில் நனைந்த மோனிகா என்று தலைப்பிட்டு சகோதரி ரஹீமாவை எப்போதோ நடித்த படத்தின் காட்சிகளை தேடித்தேடி பிரசுரித்து தம் வயிற்றெரிச்சலை சில தமிழக ஊடகங்கள் தீர்த்து வருவதை இன்று காணக்கூடியதாக உள்ளது.
# இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாளே என்கிற வயிற்றெரிச்சலில் அந்த தமிழ் ஊடகங்கள் எப்படியெல்லாம் சகோதரியை இழிவுபடுத்துகிறது பாருங்கள்!
என்றோ அவர் நடித்ததை இப்போது செய்தியாக்குவது ஏன் ?
யாருமே கவனிக்காத திரைக்கும் வராத ஒரு படத்தை பற்றி ஏன் இவர்கள் இப்படியொரு செய்தியை எழுதவேண்டும் ?
வேறு எந்த நடிகையுமே மழையில் நனைந்தபடி குத்தாட்டம் போட்டதே இல்லையா ? (முன்னாள்) மோனிகா மட்டும் இவர்களின் கண்ணுக்கு தெரிவது ஏன் ?
ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கமுடியும். அது, அவர் தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு கேடுகெட்ட நடிப்பு தொழிலை துறந்துவிட்டு தூய்மையான வாழ்க்கையை வாழத்துவங்கியதுதான் இவர்களின் கண்களை உறுத்த ஆரம்பித்திருக்கிறது!
நீங்கள் என்னவேண்டுமானாலும் எழுதிவிட்டுப்போங்கள்… சகோதரி ரஹீமா (மோனிகா) அவர்களுக்கு மட்டுமல்ல… அவரைப்போல் மனம் திருந்தி வாழ நினைக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் முஸ்லிம்களாகிய நாங்கள் துணை நிற்போம்! இன்ஷா அல்லாஹ்!!
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.