Breaking News
recent

மத நல்லிணக்க நாள்..



இஸ்லாமியர்களின் புனித நாளான பக்ரீத் பண்டிகை திருநாளை மத நல்லிணக்க நாளாக Bay Area வாழ் தமிழ் முஸ்லீம்கள் சார்பாக ப்ரீமாண்ட் லேக் எலிசபெத் பூங்காவில் கொண்டாடப்பட்டது. திரு. அபு ஐநூல்கான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் அனைத்து மதத்தையும் சார்ந்த நண்பர்கள் ஏறத்தாழ 150 பேர் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
வரவேற்புரை நிகழ்த்திய திரு.அபு அவர்கள்,பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் காரணத்தை சுருங்க விளக்கிக் கூறினார். மேலும் மனித நேயத்தையும்,மத நல்லிணக்கத்தையும்,சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும்
நோக்கோடு தான் இந்த விழாவை தான் மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்ததாக கூறினார். தொடர்ந்து திரு.குமரப்பன் (Bay Area Tamil Mandram- Founder ) வாழ்த்துரை வழங்கி இந்த விழாவின் முக்கியத்துவத்தையும்,மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தினார்.
 அவரைத் தொடர்ந்து, Bay Area Tamilமன்றத்தின் முன்னாள் தலைவரும் FeTNA 2015ன் ஒருங்கிணைப்பாளருமான திரு.தில்லை அவர்கள் இன்றைய கால கட்டத்தில் இந்த விழாவின் அவசியத்தையும்,இது போன்று பல்வேறு இடங்களில் நடத்த வேண்டும் என்றும் சுட்டிக் காட்டி பேசினார்.
இந்த விழாவின் பொழுது போக்கு அம்சமாக அமெரிக்கர் ஒருவர் “ஒருவன் ஒருவன் முதலாளி”என்ற தமிழ் பாடலையும் “ஜெய்ஹோ”என்ற பாடலையும் பாடியது. வந்திருந்தவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. விழாவின் இறுதியாக பல்வேறு வகை உணவுகளுடன் விருந்து பரிமாறப்பட்டது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.