Breaking News
recent

உலகின் மோசமான சர்வதேச விமான நிலையங்கள் 10. இரண்டாமிடம் பாகிஸ்தானுக்கு.. மூன்றாம் இடம் சவூதிக்கு!


sleepinginairports.net என்ற Travel இணையதளம் மூலம் 2014ம் வருடத்திற்கான இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
மோசமான கட்டமைப்பு வசதிகள், நேர்மையற்ற விமான நிலைய ஊழியர்கள் மற்றும் டாக்சி டிரைவர்கள், நீண்ட நேர காத்திருப்பு, கடுமையாக நடந்து கொள்ளும் அதிகாரிகள், தூய்மை, வாடிக்கையாளர் சேவை என பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி இக்கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. 
இதில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பெனசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையம் உலகில் மோசமான விமான நிலையத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
2வதாக சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் விமான நிலையமும்,
3வதாக நேபாளத்தின் காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையமும்,
4வதாக பிலிப்பைன்சின் மணிலா நினாய் அகினோ சர்வதேச விமான நிலையமும்,
5வதாக உஸ்பெகிஸ்தானின் தாஸ்கண்ட் சர்வதேச விமான நிலையம் இடம்பெற்றுள்ளன.
அடுத்ததாக பிரான்ஸ் பாரிஸ் விமான நிலையம், ஜெர்மனியின் இரண்டு விமான நிலையங்களும், இத்தாலி விமான நிலையமும், கடைசியாக 10வது இடத்தில் அமெரிக்காவின் நியூயார்க் லாகர்டியா விமான நிலையமும் இடம் பெற்றுள்ளன.
2013ல் இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய 3 நகரங்களின் விமான நிலையங்கள் சர்வதேச அளவில் 10 மோசமான விமான நிலைய பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
இம்முறை இந்தியாவின் எந்த ஒரு விமான நிலையமும் இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.