Breaking News
recent

பேரழிவை ஏற்படுத்தக் காத்திருக்கும் “சிவப்பு இறைச்சி”



மேற்கத்தைய நாட்டினர் அதிக அளவில் சிவப்பு இறைச்சிகளை உணவாக உட்கொள்கின்றனர்.
இவர்கள் இந்த வகை இறைச்சியை வழமைக்கு மாறாக குறைந்த வீதத்தில் வாரத்தில் இரண்டு முறைகள் மட்டும் உள்ளெடுத்தால் சூழலை பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
CAMBRIDGE மற்றும் Aberdeen பல்கலைக்கழத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்த மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கத்தைய நாட்டவர்களால் அதிகளவில் உட்கொள்ளப்படும் சிவப்பு இறைச்சிக்கு ஏற்ப பண்ணையாளர்களால் கால்நடைகளை அதிகளவில் உற்பத்தி செய்ய முடிவதில்லை.
அதனையும் மீறி உற்பத்தி செய்ய முனைந்தால் சூழலுக்கு பேரழிவு ஏற்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பசளைப் பாவனை, கால்நடைகளினால் வெளியேற்றப்படும் மீதேன் வாயு என்பனவற்றின் அளவு 2050ம் ஆண்டளவில் 80 சதவீதமாக அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர்.
இதேவேளை தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் அளவினை பூச்சிய அளவிற்கு கொண்டுவருமாறு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.