Breaking News
recent

பெற்றோர்களே… இதையும் கொஞ்சம் படியுங்கள்.!

 
எல்லாம் வல்ல இறைவன்படைத்த இந்த உலகத்தில்அனைத்தும் அற்புதங்கள்.அவற்றில் ஒன்று நம் மனிதஇனம்.இஸ்லாத்தில் திருமணம்என்பது ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமை.
பொதுவாகவே திருமண விஷயத்தில், ஆண் படித்திருக்கிறானா, அல்லதுபெண் படித்திருக்கிறாளா,என்று பார்க்கிறோம். ஆனால் அப்படி ஏதும் அமையாவிட்டால் ஆண் வீட்டார் , வரதட்சணைஎன்றுபெண்னை பேரம் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.நான் கேட்கிறேன்…, பணமும், அழகுமாஒருவனுக்கு வாழ்நாள் முழுவதும் சந்தோசத்தைதந்துவிடப்போகிறது??
இதுவா நம் இஸ்லாம்சொன்ன வழி??இந்த விஷயத்தில் மணமகனாக இருக்கக் கூடிய ஒவ்வொரு ஆணும், தான் நல்ல மன நிலையிலும் , உறுதியானமன நிலையுடனும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
அடுத்ததாக பெற்றோர்களுக்கு….,ஒவ்வொரு ஆண் மகனும் பெண்னின் புகைப்படத்தைபார்த்து சம்மதம் சொன்னால் தான் திருமணநிச்சயமே நடக்கும்.ஆனால் பெண்கள் விஷயத்தில் பெற்றோர்கள்மிகவும் முரண்பாடாக செயல்படுவதை நம்மால்பார்க்க முடிகிறது.
திருமணம் முடிக்கப் போகும் பெண்களிடம் அவர்களின் சம்மதத்திற்க்குபெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.பெண்கள் கல்வியறிவில்ஓரளவு முன்னேறி வருவதால் இந் நிலை சிறிது மாறியுள்ளது எனலாமே தவிர முழுமையாக மாற்றம் கண்டுள்ளது என்பதை எவனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதிலும் பல பெற்றோர்கள்வீட்டில் அதற்க்கான சந்தர்ப்பத்தையேபெண்னிற்க்கு தருவதில்லை.”அவள் என்ன சொல்ல போகிறாள், சின்ன பொண்ணு, நாம தான அவளுக்கு நல்லதுஎது கெட்டதுஎது என பார்த்துசெய்யனும்” என கூறிவிட்டு திருமண ஏற்பாடுகளில் இறங்கி விடுகிறார்கள்+.அவள் மனதில் என்ன உள்ளது, என்பதை அவசியம் அறிய கூடிய அறிவு கூட பெற்றோர்களுக்குஇல்லை.. இல்லை…
பெண்னின் சம்மதமின்றி பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விட்டு நாளடைவில் பிடிக்காமல், வாழ்க்கையை வெறுத்துவிட்டு,பிரச்சனை ஏற்படக் கூடிய நேரத்தில்., பெற்றோர்கள் குத்துதே…, குடையுதே…என்றால் என்ன செய்ய முடியும் ? சொல்லுங்கள்பார்ப்போம்…
நமது அழகிய மார்க்கம் இஸ்லாம் இருவரின் ஒப்புதல் இன்றி திருமணம் முடிக்கக் கூடாது என்ற எளிய வழியை வலியுறுத்துகிறது.இந்த எளிய விஷயத்தை கடைபிடிக்க மறுத்தால் பெரிதான விளைவுகளை பெற்றோர்கள் ஆகிய நீங்கள்சந்திக்க தயாராகத்தான் இருக்க வேண்டும்.
இது தேவையா??சொல்லுங்கள் பெற்றோர்களே…ஆகவே திருமண ஏற்பாடுகள் செய்தால் அதற்கு முன் பெற்றோர்கள்பெண்னிடம் அவளது சம்மதத்தை கேட்டறிய வேண்டும்.இல்லையென்றால் மணமுடிக்கப்போகும் பெண்னுக்கும் வாழ்க்கை இன்பமாக இருக்காது, பெற்றோர்களுக்கும்மனது அமைதி பெறாது என்று சொல்லிக் கொண்டவனாக …

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.