Breaking News
recent

காஸாவில் பரிதாபம்; பிறக்கும் முன்பே 'தாயை' இழந்து அனாதையான குழந்தை!



காஸாவில் மிகவும் கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பிறக்கும் முன்பே 'தாயை' இழந்து குழந்தை ஒன்று அனாதையாகியுள்ளது. இஸ்ரேல் வீசிய ஏவுகணையில் உயிர் மடிந்த கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று நடந்த தாக்குதலில் குழந்தையின் தாய் மரணம் அடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாய் உயிரிழந்த நிலையில் குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது. காஸாவில் உள்ள கான்யூனிஸ்  மருத்துவமனையில் டாக்டர்கள் இறந்த தாயின் கருவில் இருந்து குழந்தையை எடுத்துள்ளனர். குழந்தையை டாக்டர்கள் அதியச குழந்தை என்று அழைத்துள்ளனர். உயிரற்ற உடலில் இருந்து அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை எடுக்கப்பட்டுள்ளது. 

குழந்தையின் தாயான 23 வயது ஷியாமா அல் ஷேக் ஏவுகணை தாக்குதலின்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மத்திய காஸா முனையில் இருந்த அவரது வீட்டை இஸ்ரேல் ஏவுகணைகள் தாக்கியுள்ளது. இதில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து அவரது கணவரும் காயம் அடைந்துள்ளார். உடனடியாக அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அப்போது ஷியாமா உயிரிழந்துவிட்டார். 


உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையை உயிர் பிழைக்க வைத்துள்ளனர். பிறந்து நான்கு நாட்கள் ஆன அந்த குழந்தைக்கு ஷியாமா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. குழந்தை நல்ல நிலையில் உள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறார். 

குழந்தைக்கு தற்போது குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தையை உயிர்பிழைக்க வைத்த டாக்டர்களுக்கு 43 வயதான அவரது பாட்டி நன்றி தெரிவித்துள்ளார். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.