Breaking News
recent

துபாயில் வேலைக்காரியை கற்பழித்த ராணுவ அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை!



பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து துபாய்க்கு புதிதாக வேலைக்கு வந்த 21 வயது பெண்ணை கற்பழித்த ராணுவ அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். 

‘எனது நாட்டில் இருந்து வீட்டு வேலை செய்வதற்காக நான் துபாய்க்கு வந்தேன். அவுத் அல் மதினா பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன். சம்பவத்தன்று, எஜமானி வெளியே சென்றிருந்த போது ராணுவத்தில் அலுவலக அதிகாரியாக வேலை செய்யும் அவரது கணவர் வீட்டினுள் வந்தார். 

தனது சீருடையை துவைத்து தரும்படி அவர் என்னிடம் கூறினார். அந்த துணியை நான் வாஷிங் மெஷினில் போடச் சென்ற போது, என் கையை பிடித்து தனது படுக்கையறைக்கு இழுத்துச் சென்ற அவர், என்னை முரட்டுத்தனமாக பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டார். 

பின்னர், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கூறி விட்டு, காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். அந்த வீட்டில் இருந்து தப்பித்து வந்த நான் வழியில் இன்னொரு பிலிப்பைன்ஸ் பெண்ணை சந்தித்து நடந்ததை கூறினேன். 

அந்த பெண்ணின் துணையுடன் எங்கள் நாட்டு தூதரகத்துக்கு சென்று நடந்த சம்பவத்தை விவரித்து கூறி அழுதேன். அவர்களின் ஆலோசனைப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளேன். என்னை கற்பழித்தவர் மீது வழக்குப் பதிவு செய்து, எனக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும்’ என்று தனது புகார் மனுவில் அந்த பெண் குறிப்பிட்டிருந்தார். 

மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால், அந்த ராணுவ அதிகாரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். புகார் அளித்துள்ள பெண்ணின் சம்மதத்தை மீறி நான் எதுவும் செய்யவில்லை என்று அவர் முதலில் மறுத்தார். தன்னிடம் இருந்து மிரட்டி, பணம் பறிக்க அவள் நாடகம் ஆடுகிறாள் என்றும் குற்றம் சாட்டினார். 

இது தொடர்பாக நடந்து வந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.