Breaking News
recent

மத்திய அரசு திட்டம் ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவி செய்ய 114 நகரத்தில் சிறப்பு மையம்!


ஆபத்தில் இருக்கும் பெண்கள் தகவல் அளிக்க வும், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வும் வசதியாக நாடு முழுவதும் 114 நகரங்களில் சிறப்பு மையம் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட கூடிய இந்த மையத்தில், அழைப்பவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியும். 
உடனடியாக அருகில் உள்ள போலீஸ் வாகனம் அனுப்பி வைக்கப்படும். இந்த வசதிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலமாக இயக்கப்படும். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, இது தொடர்பான கேள்விக்கு அளித்த பதிலில் ராஜ்நாத் சிங் கூறியதாவது: நாடு முழுவதும் 114 இடங்களில் இந்த சிறப்பு மையம் அமைக்கப்படும்.
10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 54 நகரங்கள், மாநில தலைநகரங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் 41 மாவட்டத் தலைநகரங்கள் ஆகிய இடங்களில் இந்த சிறப்பு மையம் அமைக்கப்படும். ரூ.321.69 கோடி மதிப்பீட் டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு நிர்பயா நிதியிலி ருந்து ரூ.32.69 கோடி இந்தாண்டு பிப்ரவரியில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு இழப் பீடு வழங்க, அனைத்து மாநிலங்களும் தனியாக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.