பெரம்பலூர் மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவிகள் மெüலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் (பொ) எம்.ஏ. சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்வியில் சிறந்து விளங்கி, வசதியின்றி கல்வியைத் தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு இந்தக் உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தில் தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி மதங்களைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ. 12,000 கல்வி உதவித் தொகையை இரு தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை கல்விக் கட்டணம், பாடப்புத்தகம், எழுதுபொருள்கள் மற்றும் உண்டு உறையுள் கட்டணங்களுக்காக வழங்கப்படுகிறது.
உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவிகள் 10-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சத மதிப்பெண்கள் பெற்று 2013- 14-ல் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11-ம் வகுப்பு பயில்பவராகவும், விண்ணப்பத்துடன் பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்ந்ததற்கான சேர்க்கை அனுமதிச்சீட்டு கடித நகலையும் இணைக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) ரூ. 1 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
பெற்றோரின் வருமானச் சான்றிதழ், ஓய்வூதிய ஆணை, ரூ. 20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத் தாளில் உறுதி ஆவணம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
நிறைவு செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து, பயிலும் கல்வி நிலையத்தில் 20.9.2013-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக