இது கடந்த 17-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகளைப் பிடிக்கக்கூடிய குற்றங்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், புலன் விசாரணை முடிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டாலோ, மேல் நடவடிக்கை கைவிடப்பட்டாலோ அதுபற்றிய குறுந்தகவல் புகார்தாரருக்கு அனுப்பி வைக்கப்படும்.
குறுந்தகவல் அளிக்க, காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தால் போதுமானது. குறுந்தகவல் தற்போது ஆங்கிலத்தில் அனுப்பப்படுகிறது. விரைவில் தமிழில் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : தி இந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக