Breaking News
recent

சவூதியில் புதிய ரியால் நோட்டுகள் அறிமுகம்.!


சவூதியில் புதிய ரியால் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் புகைப்படங்களுடன் கூடிய புதிய ரியால் நோட்டுகளில் மக்கா, மதீனா உள்ளிட்ட புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
மேலும் ஒரு ரியால் நாணயம், மற்றும் 500 ரியால் நோட்டுகளில் மன்னர் அப்துல் அஜீஸின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.அதேபோல ஒரு ரியால் நாணயத்திலும் 10, 50, 100 ரியால் நோட்டுகளில் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு ரியால் நோட்டு படிப்படியாக திரும்பப்பெறப்படும் என சவுதி அரேபியன் மானிட்டரி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
கடந்த திங்களன்றே புதிய ரியால் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், வரும் 26 ஆம் தேதி முழுமையாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை சவூதி ரியாலின் ஆறாவது பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.