Breaking News
recent

வளைகுடாவில் மாதச் செலவு அதிகரிப்பு : நாடு திரும்பும் இந்தியர்கள்.!


வளைகுடா நாடுகளில் மாதச் செலவு அதிகரித்துள்ளதால் இந்தியர்கள் தங்களது குடும்பத்தினரை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்புகின்றனர்.

சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் விரி விதிக்க வளைகுடா நாடுகள் முடிவு செய்துள்ளன. இதனால், அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது குடும்பத்தினரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர். 

மற்றவர்களும் குடும்பத்தினரை அங்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். குறிப்பாக ஓமன் நாட்டில் வரி விதிக்க எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால், வெளிநாட்டில் இருந்து அங்கு குடியேறியிருப்பவர்களது மாத செலவு அதிகரிக்கும்.

கச்சா எண்ணை விலை வீழ்ச்சியால் வளைகுடா நாடுகளின் கூட்டு குழும பொருளாதாரம் பாதித்துள்ளது. துபாயை தவிர இதர வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் பெரும்பாலும் பெட்ரோலை மட்டுமே முழுமையாக நம்பியுள்ளது. 

விலை வீழ்ச்சியால் அங்குள்ள நிறுவனங்கள் வேலைவாய்ப்பை குறைத்து வருகிறது. ஊதிய உயர்வையும் ரத்து செய்துள்ளன. மேலும், புதிய திட்டங்கள் ஏதும் தொடங்கப்படவில்லை. மாறாக பல  திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. 

வரி விதிப்பை அதிகரித்து, அந்நாடுகளில் பெட்ரோல், மின்சாரம் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்தியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் பலர் வேலையிழந்து நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

raja சொன்னது…

saudi also have expense over lady insirance family insurnc school fee.sponser thameen.family card ecpens housing rent too expensiv.still..

Blogger இயக்குவது.