Breaking News
recent

ஒரே சிம் கார்டு ஆனால் ஒன்பது நம்பர் பயன்படுத்த முடியும்.!



உலக பிரபலமான ப்ளாக்பெரி நிறுவனம் விர்ச்சுவல் சிம் ப்ரோவிஷனிங் எனும் தொழில்நுட்ப சேவையினை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது. இந்த சேவையின் மூலம் ஒரே சிம் கார்டினை கொண்டு ஒன்பது நம்பர்கள் வரை ஒரே கருவியில் பயன்படுத்த முடியும்.
ஒரே மாதம் முப்பது லட்சம் டூயல் சிம் கொண்ட மொபைல்கள் விற்பனையாகும் நாட்டில் இந்த சேவை நல்ல வரவேற்பை பெறும் என்பதோடு பலருக்கும் இது பயனுள்ளதாகவும் இருக்கும் என ப்ளாக்பெரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் லால்வானி தெரிவித்தார்.
இந்த சேவைக்கான தொழில்நுட்பம் தற்சமயம் தயாராக உள்ளது, இருந்தும் இதற்கான அனுமதி பெறுவது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சுனில் தெரிவித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

Unknown சொன்னது…

Thanks for the good information v.kumarakurubaran THiruvalaputhur

Blogger இயக்குவது.