Breaking News
recent

குவைத்தில் சிக்கித் தவித்த தமிழரை மீட்ட இந்தியன் சோஷியல் ஃபோரம்.!



குவைத்தில் வீட்டு வேலைக்கு வந்து கொடுமைக்கு ஆளான தஞ்சையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் உதவியால் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். 

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவர் வீட்டு வேலை செய்ய குவைத்திற்கு சென்றார். அங்கு அவரை பணியமர்த்திய குவைத் நாட்டவர் அவரை கொடுமைபடுத்தியுள்ளார். 

குவைதியின் கொடுமைகளுக்கு ஆளான அவரை மீட்க குவைத்தில் உள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் தொடர் முயற்சி செய்தது.

மேலும் அவருக்கு ஃபோரம் ஆலோசனையும், உதவியும் செய்தது. இந்தியன் சோஷியல் ஃபோரம் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவரை மீட்டு கடந்த 25ம் தேதி எதிஹாட் விமானம் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது. 

சொந்த ஊரை அடைந்த பிறகு ராஜேஷ் தன்னை காப்பாற்றிய இந்தியன் சோஷியல் ஃபோரத்தை தொடர்பு கொண்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.