Breaking News
recent

ஏமன் சண்டையில் 1,080 பேர் உயிரிழந்தனர் 4,352 படுகாயம் – உலக சுகாதார அமைப்பு.!



ஏமன் சண்டையில் 1,080 பேர் உயிரிழந்தனர், 4.352 படுகாயம் அடைந்தனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
ஏமன் நாட்டில், அதிபரை ஓட வைத்து, முக்கிய நகரங்களை தங்கள் வசப்படுத்திய, ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகள் கரம் கோர்த்தன. 
இந்த நாடுகளின் கூட்டுப்படைகள் ஏமனில் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கி வான்தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல்களில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர்.
ஏறத்தாழ ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த தாக்குதல்களை, ஏமன் அதிபர் கேட்டுக்கொண்டதின்பேரில், நிறுத்திக்கொள்வதாக சவூதி கூட்டுப்படைகள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
சவுதி அரேபியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும், அந்த அச்சுறுத்தலை அகற்றுவதற்காகத்தான் தாக்குதல்கள் தொடுத்ததாகவும், தங்கள் நோக்கம் நிறைவேறி விட்டதாகவும் சவுதி கூட்டுப்படைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான மணி நேரத்திற்குள் 24, டாய்ஸ் நகரில் ஏமன் ராணுவத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் தொடுத்தனர். அதைத் தொடர்ந்து, அங்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் மீண்டும் வான் தாக்குதல்கள் நடத்தியது. 
ஏமனில் தாக்குதல்களை மீண்டும் சவுதி கூட்டுப்படைகள் தொடங்கி விட்டனவா அல்லது இது ஒரு குறுகிய கால நடவடிக்கையா என தெரியத நிலையே நிலவியது. இந்நிலையில் ஏமன் விவகாரத்தில் ஐ.நா. ஆதரவுடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். 
ஆனால் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டபின்னர்தான் பேச்சு வார்த்தை என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஏமன் சண்டையில் 1,080 பேர் உயிரிழந்தனர், 4.352 படுகாயம் அடைந்தனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. 
இதில் 48 சிறுவர்கள், 28 பெண்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்படாத நிலையில் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே உதவி பணிகளுக்கான நடவடிக்கையும் தொடங்கப்பட்டு
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.