Breaking News
recent

தவறவிடாதீர்கள்.. சவுதி அரசர் வழங்கும் சலுகைகள் இவை.



தூதரகத்தில் பாஸ்போர்ட் பெற்றவர்கள் நேரடியாக ஜவாஸத் சென்று Exit அடித்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த கட்டணமும் கிடையாது. உங்களது இக்காமா காலாவதி ஆகியிருந்தாலும் அதற்கான கட்டணம் எதுவும் இல்லை.

உங்களது நிலையை மாற்றி வேலை செய்ய விரும்பினால் அதற்கான கட்டணங்களை செலுத்தி பணியாற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது எல்லாவகை பணியாளர்களுக்கும் பொருந்தும்.

முன்பு வேலை செய்த நிறுவனம் உங்களது இக்காமாவை புதிப்பிக்கவில்லையா? இக்காமா தேதிகாலாவதி ஆகிவிட்டது. பாஸ்போர்ட்டும் தரமறுக்கிறாரா? நீங்கள் நல்ல வேலை தேடிக்கொண்டு பழைய கபிலின் அனுமதியின்றி புதிய நிறுவனத்தில் உங்களை மாற்றிக் கொள்ளலாம். MOL மூலம் தனாஜூல் மாறியபின் தூதரகத்தின் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Domestic Labor: வீட்டுபணியாளர்கள் (ஹவுஸ்டிரைவர், வீட்டு துப்புவுபணியாளர், வீட்டுப் பணிப்பெண் ஆகியோர்) நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களது இக்காமா புதுப்பிக்கப்படாமல் விட்டு விட்டார்களா? அல்லது அந்த விஷாவில் வெளியில் வேலை பார்த்ததில் ஹூரூப் கொடுக்கப்பட்டுள்ளதா?

வேறு கபில் மூலம் மீண்டும் வீட்டுபணிக்கு செல்ல நேரடியாக ஜவாஸத் மூலம் உங்கள் தகுதியை மாற்றிக் கொள்ளலாம். அல்லது கம்பெனிகளுக்கு மாற வேண்டுமா? லேபர் ஆபிஸ் MOL மூலம் பச்சை வண்ண நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ளலாம். எந்தக்கட்டணமும் கிடையாது.


ஊருக்கு செல்லவேண்டுமா? எந்தகட்டணமும் நிபந்தனையும் இல்லாமல் ஊருக்குச் செல்லலாம்…

July 3, 2008 க்கு முன்பு ஹஜ் உம்ரா விசாவில் வந்து தங்கியவர்கள். தங்களது நிலையை மாற்றிக் கொள்ளலாம். வீட்டுப் பணியாளர்களாக பணியாற்ற நேரடியாக ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளலாம். நிறுவனங்களில் வேலைக்குச் சேர விரும்புபவர்கள் முதலில் லேபர் ஆபிஸ் அதன்பின் ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளலாம்.

ஊருக்குப் போக விரும்புபவர்கள் எந்த தண்டனையும் கட்டணமும் இல்லாமல் தாயகம் செல்லாம். வேறு விஷாவில் மீண்டும் திரும்பி வர எந்த தடையும் இல்லை. ஹவுஸ் டிரைவர்கள் தங்களது புரோபசனலை எந்த கட்டணமும் இன்றி மாற்றிக் கொள்ளலாம். நேரடியாக ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளுங்கள்.

சகோதரர்களே! Custodian of the TwoHoly Mosques King Abdullah bin Abdulaziz அவர்கள் வழங்கி உள்ள இந்தச் சலுகையை முழுமையாக பயன் படுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

சலுகை காலத்திற்குப்பின் கெடுபிடிகள் கடுமையாக இருப்பதுடன், கடுமையான தண்டனையும் 2 ஆண்டு சிறைவாசம் 1 இலட்சம் ரியால் வரை அபராமும் விதிக்கப்படும்.

எச்சரிக்கை சகோதரர்களே…. உங்களால் முடிந்தவரை நம் தேசத்தவர்கள் அனைவருக்கும் இந்த தகவலை எடுத்துச் செல்லுங்கள். இறைவன் உங்களுக்கு நற்கூலிகளை வழங்குவான். 
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

Unknown சொன்னது…

Please help sri Lanka Muslim

Blogger இயக்குவது.