Breaking News
recent

கத்தார் தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்!



1-தொழிலாளார்களின் கடவுச் சீட்டை கையகப்படுத்தி வைத்திருக்கும் முதலாளிகளுக்கு ஏற்கனவே பத்தாயிரம் றியால் அபராதம் என்பது திருத்தப்பட்டு ஐம்பதாயிரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.!

2-”குறூஜ்” எனும் கட்டாரில் இருந்து வெளியேறுவதற்கான “அனுமதி” ரத்து செய்யப்பட்டு மூண்று நாட்களில் அணுமதி வழங்கப்படும் விதத்திலான விண்ணப்ப முறை அறிமுகம்.

3-ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வருபவர்கள் -ஒப்பந்த காலம் வரையறை செய்யப்பட்டதாக இருந்தால் -ஒப்பந்த காலம் முடிந்ததும் வேறு வேலை தேடிக்கொள்ளலாம்.” ஆட்சேபனை இல்லை என்பதை உறுதிசெய்யும் ஆவனம் அவசியமில்லை.

வரையரை செய்யப்படாததாக இருந்தால் ஐந்து வருடங்களுக்குப் பின் விரும்பிய வேலையில் இணைந்து கொள்ளலாம்.

(எனவே உங்கள் ஒப்பந்தம் கால வரையரை செய்யப்பட்டுள்ளதா என்பதை இன்றே, இப்போதே உறுதி செய்து கொள்ளுங்கள்.)

4-தொழிலாளிகளுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்கப்படுகின்றது என்பதை உறுதி செய்யும் நோக்கில் மத்திய வங்கியின் மேற்பார்வையில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதனூடாகவே சம்பளம் வழங்கப்பட வேண்டும்!

5-தங்குமிட வசதிகள் தரம் வாய்ந்ததாக சுகாதார முறையில் உள்ளதா என்பதைப் பரிசோதிக்க பரிசோதகர்களின் எண்ணிக்கை 300 ஆல் அதிகரிப்பு.
அல் ஹம்து லில்லாஹ்!!
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

Unknown சொன்னது…

ஒப்பந்தம் கால வரையரை செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொல்வது

Blogger இயக்குவது.