Breaking News
recent

சென்னையின் முதல் ஸ்கைவாக்!


  • ஆம்... சென்னையின் முதல் ஸ்கைவாக் விரைவிலேயே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஆரம்பகட்ட பணிகளும் முடிவடைந்து விட்டன. மார்ச் மாதத்தில் ஸ்கைவாக் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.

    சென்னையில் சாலை விபத்துகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் மக்கள் சாலையில்தான் நடந்து செல்லும் நிலையுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளில் மக்கள் நடந்து செல்லும் போது அதிவேக வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகிறார்கள். இதனால், தி.நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட நெரிசல் மிகுந்த சாலைகளில் ஸ்கைவாக் அமைக்க அரசு திட்டமிட்டது. 

    அதன்படி, சென்னையின் முதல் ஸ்கைவாக் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் விரைவிலேயே அமைய உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை, மூர்மார்க்கெட் போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இவர்கள் சாலையில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுவதால் இந்த இடங்களை இணைக்கும் வகையில் பிரமாண்ட ஸ்கைவாக் அமைகிறது. 

    1 கி.மீ. தூரம் கொண்ட இந்த ஸ்கைவாக் மூலம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 9 முக்கிய இடங்கள் இணைக்கப்பட உள்ளன. 

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சென்னை மருத்துவக்கல்லூரியில் இருந்து ரூ.20 கோடி செலவில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஸ்கைவாக் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து ரயில்வே உட்பட பலதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஸ்கைவாக் அமைக்க ரயில்வே துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான வடிவமைப்பும் முடிவாகி விட்டது. இந்த ஸ்கைவாக் வழியாக பார்க் ரயில்நிலையம், ரிப்பன் பில்டிங் உட்பட 9 இடங்களுக்கு பாதசாரிகள் எளிதில் செல்லலாம். 2014 மார்ச் மாதத்தில் பணிகள் தொடங்கப்படும்‘ என்றார்.

    ஸ்கைவாக் இணையும் இடங்கள்
    *  சென்னை மருத்துவக்கல்லூரியின் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் பகுதி.

    *  அரசு பொதுமருத்துவமனை

    * பார்க் பறக்கும் ரயில்நிலையம்

     பார்க் புறநகர் ரயில்நிலையத்தின் இடது பகுதி

     ஈவினிங் பஜார்

     வால்டாக்ஸ் சாலை

     சென்ட்ரல் ரயில்நிலையம்

     மூர்மார்க்கெட் புறநகர் ரயில்நிலையம்

     ரிப்பன் பில்டிங் வலது பகுதி
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.