Breaking News
recent

இனி 5 ம் வகுப்பு வரை மட்டுமே ஆல் பாஸ்.!


மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்வி கொள்கையை வகுத்துள்ளது. பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக அக்கொள்கையின் முக்கிய அம்சங்கள் இணையதளத்தில் வெளியானது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 8ம் வகுப்பு வரை இருந்த ஆல் பாஸ் திட்டம் தற்போது 5ம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படும். 8ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தாங்கள் விரும்பினால், 5–ம் வகுப்பு வரை தாய் மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்று மொழியாக கொண்டு, பாடங்களை கற்பிக்கலாம், இரண்டாவது மொழி ஆங்கிலமாகவும், மூன்றாவது மொழியை அரசே தெரிவு செய்யலாம்.

பள்ளி முதல் பல்கலைகழகங்கள் வரை சமஸ்கிருத மொழியை கற்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 6 சதவீதம், கல்வித் துறையில் முதலீடு செய்ய வேண்டும்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்விச் சேவையைத் தொடர்வதை ஊக்குவிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, இந்தியப் பல்கலைக்கழகங்கள், வெளிநாடுகளில் கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்கும் அனுமதியளிக்கப்பட வேண்டும்.

அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும்கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த பரிசீலிக்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றும் நோக்கத்தில், அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.