Breaking News
recent

1000 ஆண்டு பழமையான கேரள பள்ளிவாசலில் பெண்களுக்கு அனுமதி.!


கேரளாவில் 1000 வருடம் பழமையான க்கு செல்ல நேற்று முதல் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.நாடு முழுவதும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள கோயில்களில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

இந்நிலையில் கேரளாவில் புராதனமான 1000 ஆண்டு பழமையான ஒரு பள்ளிவாசலில் நேற்று முதல் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கோட்டயம் மாவட்டத்திலுள்ள தாழத்தங்காடி ஜும்மா பள்ளிவாசல் மிக அரிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டதாகும். இந்தியாவிலேயே புராதனமான மிகுந்த கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளிவாசலை பார்ப்பதற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த ஜும்மா பள்ளிவாசலில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. 


 இந்நிலையில் நாடு முழுவதும் கோயில்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதை தொடர்ந்து தாழத்தங்காடி ஜும்மா பள்ளிவாசலிலும் பெண்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நேற்று முதல் இந்த பள்ளிவாசலில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சில நிபந்தனைகளுடன் இங்கு பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பள்ளிவாசலுக்குள் பிரார்த்தனை செய்யக்கூடாது என்றும் கட்டிட அழகை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறினாலும் சில பெண்கள் பிரார்த்தனை செய்துவிட்டுதான் திரும்புகின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.