Breaking News
recent

ஷியா பள்ளிவாசல் மீது தாக்குதல்: குவைத்தில் 7 பேருக்கு மரண தண்டனை.!



குவைத் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில், அங்குள்ள நீதிமன்றம் ஒன்று ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.அந்தத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இதர எட்டு நபர்களுக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற இந்தத் தாக்குதலை தாங்களே நடத்தியதாக, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் குழுவினர் தெரிவித்திருந்தனர். அந்தப் பள்ளிவாசல் ஷியாப் பிரிவினரால் மதவழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.