Breaking News
recent

வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ் இஸ்லாம் அரபு நாட்டில் வாழும் மாற்றுமத சகோதரனின் அருமையான பதிவு.!


உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு சவுதி அரேபியா. இந்தியாவுக்கு கிட்டும் அந்நிய செலவாணியில் அதிக சதவீதத்தை தருவதும் சவூதி தான். 

என் சிறு வயதில் அனுபவித்த வறுமையின் கொடூரத்தை நினைத்தால் இன்னும் அழுகை வருகிறது. இக்கால இளைஞர்கள் அவற்றை அறிய வாய்ப்பு இல்லை. 

அணிய பின்புறத்தில் கிழிந்த ஓட்டையுடன் கூடிய ட்ரவுஸர், புதிய துணி இல்லாத தீபாவளிகள். சாப்பிட ஒரு வேளை மட்டும் கிட்டும் கேப்பை கூழ். நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களை விட கிராமங்களில் நிலவிய பஞ்சம் பசி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது. 

இதனை மாற்றி இப்போது நாம் அனுபவிக்கிற ஒரளவு வறுமை இல்லாத நிலை உண்டாக அரபு நாடுகள் தந்த வேலை வாய்ப்புகள் தானே பிரதான காரணம்.

America , ஐரோப்பா, போன்றவை டாக்டர், இன்ஜினியர், mca, mba களுக்கு மட்டுமே கைகொடுத்தன. 

ஆனால் இரண்டாம் கிளாஸ் படித்த என் அப்பா போன்றவர்களுக்கு கை கொடுத்தது அரபு நாடுகளே. என் அப்பா போன்ற படிக்காத ஏழைகள் பல லட்சம் பேரின் வாழ்க்கையின் வெற்றியின் திருப்பு முனைக்கும் அரபு நாடுகள் தான் காரணம். 

நானும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் படிப்பு படித்ததும் அரபு நாட்டு பணத்தில்தான். இன்று கிராமங்களில் கூட பல லட்சம் கொடுத்து மனைகள் வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க அரபு நாட்டு காசும் ஒரு முக்கிய காரணம் அல்லவா.. 

நம் பொருளாதாரத்தின் ஆணிவேராகிய அந்நிய செலவாணி கையிருப்பு பெரும்பாலும் நமக்கு கிட்டியதும் கிட்டுவதும் இந்தியர்கள் அரபுநாட்டிலிருந்து அனுப்பும் பணம் மூலமாகவே.

துலுக்கன் கடையில் சாமான் வாங்காதே என பிரச்சாரம் செய்யும் இயக்கங்களுக்கு அதிக நன்கொடை அனுப்புவது அரபு நாட்டில் வேலை செய்யும் NRE களே. 

அரபு நாடுகளை, இஸ்ரேல் பூண்டோடு அழிக்க வேண்டும் என ஸ்டேட்ஸ் போடுவோர் பெரும்பாலோர் அந்த ஸ்டேடஸ் போட உபயோகித்து வரும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் துலுக்கன் துட்டில் வாங்கப் பட்டவைகளே. 

உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கத் தூண்டிய என் தமிழ் பண்பாட்டை கொலை செய்து எம் இந்துக்களை செய் நன்றி கொன்ற மக்களாக மாற்றப் பாடுபடும் மதவெறியர்கள் புண்ணியத்தில் பழய பஞ்சம் பசி மீண்டும் வந்து விடுமோ என பயப்படுகிறார்கள் பச்சை ஹிந்துக்கள். பரமேஷ்வரா!,

உன் பாரதத்தை இந்த பாதகர்களிடமிருந்து பாதுகாத்திடு பரம்பொருளே!.

நன்றி. ரவி சங்கர் இந்து தமிழன்…\
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.