Breaking News
recent

தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி ?


வெற்றி என்பது எது பலன் தராது என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, எது பலன் தரும் என்பதைக் கண்டு அறிவதும் தான்.

வெற்றிப் படிக்கட்டுகளில் வீறுநடை போடத் தேவை. தன்னம்பிக்கை தன்னைப் பற்றியும், தனது திறமைகளைப் பற்றியும், தனது பலத்தைப் பற்றியும், பலவீனத்தை பற்றியும் சரியாக மதிப்பீடு செய்வதால் உருவாகும் நம்பிக்கை இது.

தன்னம்பிக்கை உள்ளவர்கள் தங்களையே குறைகூறிக் கொண்டிருக்க மாட்டார்கள். அதைப் போலவே தங்களைப் பற்றியும் தங்களது சாதனைகளைப் பற்றியும் சுயபுராணம் பாடுவதை ஒரு கலையாகக் கொண்டிருக்க மாட்டார்கள். தன்னம்பிக்கையைக் குழந்தைப் பருவத்திலேயே வளர்க்க முடியும். குழந்தைகளைச் சுதந்திரமாக வளரவிட்டு அவர்களுக்கு இளம் பருவத்திலேயே தன்னம்பிக்கையையூட்டி அவர்களை வளர்க்க முடியும். குழந்தைகளைச் சுயமாக எதையும் செய்யவிடாமல் யாருடனும் பழகவிடாமல் கட்டுக்குள்ளேயே வளர்ப்பது நாளடைவில் அக்குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை இல்லாமல் தாழ்வு மனப்பான்மை உருவாக வழி ஏற்பட்டு விடும்.

முடிவு எடுக்கத் தயங்குபவர்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு சுயபுத்தியைச் செலுத்தி முடிவெடுக்காதவர்கள் தங்களது முடிவுகளுக்கு மற்றவர்களின் அங்கீகாரத்தை தேடுபவர்கள். தாங்கள் எடுத்த முடிவை அமல்படுத்தத் தயங்குபவர்கள். பெரும்பாலும் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள். யாரிடமும் ஆலோசனை கேட்கலாம்.

 எந்தக் கருத்தையும் பரிசீலித்துப் பார்க்கலாம். ஆனால், முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களில் சுய சிந்தனையுடன் முடிவெடுக்கும் பழக்கம் வந்தால் பெரிய விஷயங்களிலும் சுய சிந்தனையுடன் முடிவு காண்பது எளிது. தன்னம்பிக்கை மனதில் இருந்தால் மட்டும் போதாது. செயலிலும் பிரதிபலிக்க வேண்டும்.
இதுவரை, செய்து வந்த காரியத்திலிருந்து விலகி, புதிய விஷயங்களில் ஈடுபாடு கொள்ளும் மனம் உற்சாகம் கொள்கிறது புத்துணர்ச்சி பெறுகிறது. மற்றவர்களின் சுக, துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டு அவர்களுக்கு யோசனைகளைக்கூறி உதவுவது நம்மிடம் படிப்படியாகத் தன்னம்பிக்கையை வளர்க்கும் அதுபோன்ற பிரச்சினைகள் நமக்கு வரும்போது அவற்றை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.