துரிதமான உலக வாழ்க்கைக்கு இந்த முறை ஏற்றதாக இருப்பதால் பல கட்டுமான நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை பின்பற்ற தொடங்கி உள்ளன.
ரெடிமேட் அறைகள்.
சுவர்கள் மற்றும் கூரைகள் பயன்பாட்டாளர்கள் விரும்பும் அளவு முறைக்கு ஏற்ப ரெடிமேடாக தயாராகி வந்தன. அந்த வகையில் ரெடிமேடாக உருவாகி வருகிறது ரெடிமேட் அறைகள்.
இவை சாதாரண முறையில் கட்டமைக்கப் படும்கட்டுமானங்களை விடவும் உறுதியாக அமைகின்றன. ‘ரெடிமேட் அறைகள்’ என்று அழைக்கப்படும் இம்முறையில் உருவாகும் கான்கிரீட் கற்கள் அதீத தாங்கு திறன் பெற்றிருக்கின்றன.
இதற்கு முன்னர் கட்டுமான துறையை வலுப்படுத்தி வந்த பைபர் ரீன்போர்ஸ்ட் கான்கிரீட் என்ற முறை இந்த ரெடிமேட் அறைகள் முறையிலும் பயன்படுத்தப்படுகிறது.
கான்கிரீட்டின் வலிமை.
பைபர் ரீன்போர்ஸ்ட் கான்கிரீட் முறைகள் நுண்ணிய அளவிலான மூலக்கூறுகளை கொண்டவை என்பதால் இவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் கான்கீரிட் சுவர்களை எளிதில் உடைக்க முடியாது.
இந்த ரெடிமேட் அறைகளை கொண்டு உலக நாடுகளில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்ற.
இதன் கடின தன்மையை டோக்கியோ மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்கள் இணைந்து கண்டறிந்துள்ளன.
இவை நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ள புதுமை கட்டுமானமாக கருதப்படுகிறது. இந்த முறையில் ரெடிமேட் அறைகளின் கான்கிரீட்டுடன்
வெறும் 2 சதவீத அளவிற்கு மட்டுமே பைபர் சேர்க்கப்படுகிறது. இது நானோ–மைக்ரோ– மாக்ரோ முறையில் செயல்பட்டு சுவர்களுக்கு கடினத் தன்மையை கொடுக்கிறது.
ஜிப்சம் பயன்பாடு.
இதன் மற்றொரு அம்சமாக இதில் உருவாகும் கற்கள், கட்டுமானங்கள் சில குறிப்பிட்ட தன்மைகளை பெற்றுள்ளன.
இந்த முறையில் உருவாகும் கற்கள் மற்ற கற்களை விட மிகவும் எடை அதிகமுள்ளதாக உள்ளன.
இந்த முறையில் உருவாகும் கற்களில் கான்கிரீட் கலவைகளுடன் கண்ணாடி கழிவுகள், பாலிமர் பொருட்கள் போன்ற எடை குறைவான மூலக்கூறுகளும் அதிக அளவில் ஜிப்சமும் மூலப்பொருளாக சேர்க்கப்படுகின்றன.
ரெடிமேட் அறைகள் வளைந்த சுவர் பரப்புகளாகவும் கிடைக்கின்றன. அழகிற்காக கட்டமைக்கப்படும் கட்டிடங்களில் வளையும் கற்களின் பங்கு அதிகமாக உள்ளன.
கட்டுமானத்துறையில் பொதுவாக வளைந்த சுவர்களை வடிவமைக்க இரண்டு சுவர்களை இணைத்து சற்று வளைவாக கான்கிரீட் சுவர்கள் அமைப்பார்கள்.
ஆனால் இந்த முறையில் அமைக்கப்படும் சுவர்களை அழகிற்காகசிலதொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரெடிமேட் சுவர்களாக வளைத்துக் கொள்ள முடியும். இது வீட்டிற்கு எடுப்பான தோற்றத்தை தரவல்லது.
விரிசல்கள் தடுக்கப்படும்.
மேலும் இதன் வளைப்பு திறன் அதிகரிப்பதால்இதன்கடினத்தன்மையில் எந்தவித பாதிப்பு ஏற்படுவதில்லை.
இவற்றைக் கொண்டு பல இடங்களில் அணைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்து இருக்கிறார்கள்.
இதன் மூலம் வீடுகள் கட்டுவதினால் வீட்டின் அஸ்திவார பகுதியில் ஏற்படும் விரிசல்கள் தடுக்கப்படும்.
இதில் பைபர் பொருட்கள் பயன்படுத்துவதால் தண்ணீர் உட்புகுதல் மற்றும் நீர் கசிதல் போன்றவையும்தடுக்கப்படுகின்றன.
கட்டுமான வேலை எளிதாக முடிவடைவதால் இந்த ரெடிமேட் சுவர்களுக்கு மவுசு கூடி வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக