Breaking News
recent

உறவினர்களுக்காக அன்பளிப்புகள் வாங்கும் வீடு திரும்பும் ஹாஜிகள் 2.2 பில்லியன் (220 கோடி) சவூதி ரியால்கள் ஜித்தா வர்த்தக சபை தலைவர் தெரிவித்துள்ளார்.



இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள ஹாஜிகள் வீடு திரும்பும் நிலையில், இதுவரை தம் உறவினர்களுக்காக வாங்கியுள்ள அன்பளிப்புகளின் பெறுமதி சுமார் 2.2 பில்லியன் (220 கோடி) சவூதி ரியால்கள் என ஜித்தா வர்த்தக சபை மற்றும் கைத்தொழில்துறை சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஹாஜிகளும் சுமாராக 1300 ரியால் தொடக்கம் 1600 ரியால் வரை இதற்காக செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் வாங்கிய பொருட்களில் முக்கியமா
க திக்ர் செய்ய பயன்படும் தஸ்பேஹ், தொழுகை விரிப்புகள், வெள்ளை ஆடைகள், நகைகள் என்பன முக்கியமானவை என அறிவிக்கப்படுகிறது.

பல கடைகளுக்கு சொந்தக்காரரான ஒரு வர்த்தகர் தெரிவிக்கும்போது ஹாஜிகள் பெரும்பாலும் மக்கா, மதீனா, ஜித்தா போன்ற நகரங்களிலும் சிலர் மினாவிலும் அன்பளிப்புகளை வாங்குவதற்கு விரும்புவதாக தெரிவித்தார்.

இவ்வருடம் சுமார் 20 இலட்ச மக்கள் புனித கடமையை நிறைவேற்றி உள்ளனர். ஹஜ் உலகின் மிக பெரிய மக்கள் ஒன்று கூடல் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.