ஒரு இடத்தைப் பற்றியோ, நபரைப் பற்றியோ மற்றும் அமைப்பை பற்றியோ எதுவாக இருந்தாலும் கூகுள் வலைதளத்தில் தேடினால் அந்த தகவல் உடனே நமக்கு கிடைக்கும். அதனால்தான் அந்த வலைதளத்தை எல்லோரும் செல்லமாக ‘கூகுள் ஆண்டவர்” என்று அழைக்கிறார்கள்.
அந்த கூகுள் நிறுவனம் குறித்து ஒரு சூவரஸ்மான தகவல் என்னவெனில், இந்திய தேர்தல் ஆணையத்துடன் கூகுள் நிறுவனம் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர்களுக்கு உதவி செய்யும் விதமாக இந்த ஒபந்தம் அமைந்திருப்பது சிறப்பு.
வாக்காளர்கள் தங்களின் பெயர், முகவரியை கூகுளில் போட்டு தேடினால் போதும் சம்மந்தப்பட்டவருக்கான தொகுதி, வாக்குச் சாவடியின் முகவரியை நொடிப் பொழுதில் கூகுள் தெரிவித்துவிடும். நாடாளூமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்களின் பெயர் மற்றும் விவரங்களை தன் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறதாம் கூகுள். விரைவில் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக