Breaking News
recent

ரமலானில் என்ன செய்யலாம் ..! என்ன செய்யக் கூடாது ..!



ரமலானில் என்ன செய்யலாம் ..! என்ன செய்யக் கூடாது ..!
நமக்கு ரமலான் கிடைத்தும் அந்த ரமலானை நாம் நல்லவிதமாக கண்ணியப்படுத்த வேண்டும்.  உதாரணத்துக்கு .. நம் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 


நாம் அவரை எப்படி உபசரிப்போம் ..? எப்படி நாம் அவரை வரவேற்போம்..? அந்த விருந்தாளி நம் வீட்டில் சில நாட்கள் தங்க போகிறார். அந்த விருந்தாளி நம் வீட்டில் இருக்கும் காலமெல்லாம் நாம் அவரை நன்றாக கவனித்து , உபசரித்து , உண்ணவும், பருகவும் கொடுப்போம். 

அவர் நம் வீட்டில் இருந்த காலமெல்லாம் ரொம்ப சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். பிறகு அவர் புறப்படும் நேரம் வரும்போது . அந்த விருந்தாளி ரொம்ப மகிழ்ச்சியாக செல்வார். நமக்கும் அவரின் பிரிவு ரொம்ப மன கஷ்டமாக இருக்கும். இப்படித்தான் இருக்கவேண்டும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ரமலான் நம்மை விட்டு பிரியும்போது. 


ரமலான் வந்த பிறகு செய்யக் கூடாத விடயங்கள் .. இதோ
பெண்கள் அந்த ரமலான் மாதத்தில்
ஷோபிங் போவது தவிர்த்துக் கொள்ளவும்.
ரமலான் வருவதற்கு முந்தி பர்சஸ் பண்ணுவது
நல்லது!

அப்படி போனாலும் பல மணிநேரம்
ஒரு நாளிகை அங்கே கழிப்பது.
அன்று நோன்பு வைக்காமல் போவது இது நல்லது அல்ல




ரமலான் மாதத்தில்  ஃ இப்தார் நோன்பு திறப்பதற்காக பல வகையான உணவுகள் தயாரிப்பதிலேயே  நேரத்தை கழிப்பது தவிர்த்துக் கொள்ளவும்.

ரமலான் மாதம் கடைசியில்  மறுநாள் பெருநாள் . அப்பொழுது பெரும்பாலும் மக்கள்கள்  பெருநாளைக்காக பல வகையான உணவுகள் செய்வதில் அன்று இரவு முக்கியத்துவம் 


கொடுக்கிறார்கள். அந்த பெருநாள் இரவை சமைப்பதில் நேரத்தை கழிப்பதை தவிர்த்து கொள்ளவும். அந்த இரவில் அதிகம் அதிகம் அல்லாஹ்விடம்  துஆச் செய்ய வேண்டும். கூலி கொடுக்கும் நாள் அந்த இரவுதான்  .


அந்த ரமலான் மாதத்தில்  நெட் பார்ப்பது. முகநூல் பாவிப்பது, whats app மற்ற பொழுது போக்கு காரியங்களில் ஈடுபடுவது தவிர்க்க வேண்டும். டிவி யில் சீரியல் பார்ப்பது  இன்னும் என்ன என்ன பொழுதுபோக்கு விடய்னக்ல் இருக்கிறதோ அவைகளை தவிர்த்து கொள்ளவும்.

ரமலானில் செய்ய கூடிய காரியங்கள் /அமல்கள் ..


தொழுகை ஜமாத்துடன் தவறாமல் தொழுது வரவேண்டும். ரமலானில் மட்டும் தொழுது விட்டு மற்ற மாதங்களில் தொழாமல் இருப்பது ஒரு முஸ்லிமுக்கு அழகு அல்ல! அப்படி செய்வது கூடாது .


அதிகம் அதிகம் குர்ஆன் ஓதவேண்டும். தமிழ் பொருளுடன் ஓதுவது நல்லது. அல்லாஹ்விடம்  பாவமன்னிப்பு கோரவேண்டும் . நம் தேவைகளை கேட்க வேண்டும். மற்ற முஸ்லிம்களுக்கும் துஆச் செய்ய வேண்டும்.


  பெண்கள் வீட்டில் அதிகம் அதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும் . அல்லாஹ்விடம் அழுது  பாவமன்னிப்புக் கோரவேண்டும். நரகத்தை விட்டும் பாதுகாப்புக்  தேட வேண்டும். அல்லாஹ்வை நினைவுக் கூறவேண்டும்.


பெண்கள்  நிறுத்தி நிதானமாக அவசரம் இல்லாமல் பொறுமையாக குர்ஆன் ஓதவேண்டும்.


 பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தொழும் முறையை கற்றுத் தரவேண்டும். பிள்ளைகளையும் குர்ஆன் ஓதுவதற்கு ஆர்வம் ஊட்டவேண்டும்.


 ஆண் பிள்ளைகள்/ பெண் பிள்ளைகள் எப்படி துஆச் செய்வது என்று கற்றுத் தரவேண்டும். பிள்ளைகளிடம் பெற்றோர்களுக்காக துஆச் செய்யும்படி சொல்ல வேண்டும். ஈமானை பற்றியும் , இறையச்சத்தைப் பற்றியும் பிள்ளைகளுக்கு பாடம் கற்றுத் தரவேண்டும்.


இப்பொழுதே உங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை கற்றுக் கொடுங்கள்! கல்வியை படிக்க சொல்லுங்கள்! உங்கள் மறைவுக்கு பின் உங்கள் பிள்ளைகள் உங்களுக்காக துஆச் செய்யும் பிள்ளைகளாக  மாறவேண்டும். நீங்கள் நல்ல பிள்ளைகளாக வளர்க்க வேண்டும். இஸ்லாத்தின் படி அவர்கள் நடக்க வேண்டும் . நீங்கள் அவர்களுக்கு முன்மாதரியாக இருக்க வேண்டும்!



ரமலான் மாதம் பிறகும்  உங்கள் குடும்பம் ரமலானில் இருந்ததுப் போல் மற்ற 11 மாதங்களிலும் நோன்பை தவிர்த்து மற்ற காரியங்கள் ரமலானில் செய்தது போல் தொடர்ந்து செய்ய வேண்டு.  உங்களைப் பார்த்து மற்றவர்கள் படிப்பினை பெற வேண்டும் . இஸ்லாமிய குடும்பமாக திகழ வேண்டும் ! இன்ஷாஅல்லாஹ்  சுவனத்தை அடைய வேண்டும்.
அல்ஹம்துலில்லாஹ்  !!!
அல்லாஹ்  மிக்க அறிந்தவன் .. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.