Breaking News
recent

இனி பெட்ரோல் பங்குகளிலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தலாம்!


இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் கீழ் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக டிஜிட்டல் பண பரிமாற்ற முறையினை பொது மக்கள் பயன்படுத்த துவங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் பணத் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் பங்குகளில் பொது மக்கள் தங்களின் டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இருந்தும் பல்வேறு பெட்ரோலிய நிறுவனங்கள் தங்களின் பங்குகளில் மொபைல் போன் பயன்படுத்துவது குறித்து அச்சம் தெரிவித்தனர். 

பெட்ரோல் பங்குகளில் மொபைல் போன் பயன்படுத்தும் போது தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் என்பதே இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டது. பண தட்டுப்பாடு பிரச்சனை இன்றும் தொடர்வதால் பெட்ரோல் பங்குகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதில் முறையான முன்னேற்பாடுகளுடன் பெட்ரோல் பங்குகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட இடைவெளியில் இருந்து ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல் பங்குகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி நிர்மலா சீத்தாராமனுடன் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.