Breaking News
recent

வாட்ஸ் அப் பயனர்களுக்கு இனிய செய்தி.!


வாட்ஸ் அப்பில் தவறாக செய்தி பதிவிடுபவர்கள் அதை திருத்தம் செய்யும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸை பதிவிட்டு பின்னர் மெருகூட்டவோ, பிழை இருந்தால் திருத்தவோ செய்யலாம். ஆனால் ல் வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற செயலிகளில் அந்த வசதி கிடையாது.
பெரும்பாலானோர் பயன்படுத்தும் தகவல் அனுப்பும் செயலியான வாட்ஸ் அப், இப்போது இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
எனினும் திருத்தும் வசதி கொண்ட அப்டேட் வாட்ஸ் அப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஆப்பிள் ஐஓஎஸ் செல்பேசிகளில் மட்டும் பயன்படுத்த முடியும்.
இது விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வசதி மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.