Breaking News
recent

+2,பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களே உஷார்.... பெயர், பிறந்த தேதியை சரி பாருங்க: கல்வித் துறை அறிவுரை



பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுஎழுதும் மாணவர்கள், மதிப்பெண், டிசி உள்ளிட்ட வற்றில் இடம் பெறும் பெயர், இனிஷியல், பிறந்த தேதி ஆகியவை சரியாக உள்ளதா என்பதை திருத்தம் செய்வதற்கான கடைசி வாய்ப்பை தேர்வுத் துறை வழங்க உள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதியும் தொடங்க உள்ளன. இத்தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயாரித்தனர்.

அவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அந்த பட்டியல்கள் தற்போது தேர்வுத்துறையில் உள்ளது. அவற்றின் அடிப்படையில் கடந்த 16ம் தேதி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாணவர்களின் இனிஷியல் பிரச்னை, பிறந்த தேதி, வயது, ஊர், பெற்றோர் பெயர் உள்ளிட்டவற்றில் சில சந்தேகங்கள் இருப்பதாக தேர்வுத்துறை கருதுகிறது.


அதனால் பள்ளிகள் மூலம் வரப் பெற்ற மாணவர்கள் பட்டியல்களை திரும்பவும் பள்ளிகளுக்குஅனுப்பி உரிய முறையில் திருத்தம் செய்ய தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.இதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. திருத்தம் செய்ய இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்பதால், மாணவர்கள் தங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.