Breaking News
recent

அஜ்மானில் வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை! மருத்துவக ஆண்டு விழாவில் தமிழருக்கு பாராட்டு.!(photos)


அஜ்மானில் வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை! மருத்துவக ஆண்டு விழாவில் தமிழருக்கு பாராட்டு
யுஏஇ நகரமான‌ அஜ்மானில் தன்னுடைய‌ சொந்த மருத்துவகத்தில் ஆண்டு முழுவதும்  வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து வரும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஷேக் முஹம்மது அலிக்கு அவரது மருத்துவக ஆண்டு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது

யுஏஇ நகரமான‌ அஜ்மானில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஷேக் முஹம்மது அலி டியர் ஹெல்த் மெடிக்கல் சென்டர் ,டியர் ஹெல்த் பார்மசி ஆகியவை நடத்தி வருகிறார் இதன் முதலாம் ஆண்டு நிகழ்ச்சி மற்றும் புதிதாக த மகப்பேறு பிரிவு திறப்பு விழாவும் நடைபெற்றது

இதில் இதில் மேதகு சேக் அப்துல் முனயீம் பின் நாஸ்சர் அல் நுயைமி கலந்து கொண்டு புதிதாக திறக்கப்பட்ட மகப்பேறு மருத்துவப்பிரிவை திறந்து வைத்தார்

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், அலுவளர்கள், பலதரப்பட்ட நிறுவணங்களில் பணி புரிபவர்கல் என அமீரக தமிழ் சொந்தங்கள் கலந்து கொண்டு டியர் ஹெல்த் மெடிக்கல் சென்டரின் முப்பெரும் நிகழ்ச்சி ஒருங்கே தொடங்கியது.கீழக்கரைடைம்ஸ் நிறுவனர் ஹமீது யாசின் இந்நிகழ்ச்சியில் முன்னின்று சிறப்பித்தார்கள்.

இதில் பங்கேற்ற மருத்துவம் தொடர்பான‌ ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் டியர் ஹெல்த் மெடிக்கல் சென்டரின் மகப்பேறுத்துரை சிறப்பு மருத்துவர் டாக்டர் திருமதி.மீனாட்சி கதிர்வேல் பாண்டியன் , டாக்டர் அஷ்ரப் அலி, டாக்டர் ஷிபா ஆகியோர் வழங்கினார்கள்..

இந்த விழாவில் குழந்தைகளுக்கான பிரத்தியேக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

டியர் ஹெல்த் மெடிக்கல் சென்டரின் இந்த நிகழ்விற்கு வருகை தந்து சிறபித்த நமது தமிழ் மக்கள் அனைவருக்கும் ஷேக் முஹம்மது அலி & பிரேம் நசீர் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்

மருத்துவகத்தின் இயக்குநர் ஷேக் முஹம்மது அலி கூறியதாவது

இலவச மருத்துவ பரிசோதனை போன்றவை நாங்கள் செய்து வருவது சேவை செய்ய கிடைத்த வாய்ப்பாகும் எங்கள் டியர் ஹெல்த் மெடிக்கல் செண்டர் சேவை நோக்கத்துடன் பலதரப்பட்ட மருத்துவ சேவைகளை செய்து வருகிறது எனவும் இதை அனைவரும் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். வாரந்தோறு தொழிலாளார்கள் இலவச மருத்துவ பரிசோதனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எங்கள் அலுவலக எண் 06 747 1335


















VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.