Breaking News
recent

துபாயில் அதிவேகமாக செல்லும் வாகனத்தை துல்லியமாகக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.!


துபாய் சாலைகளில் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு பலவிதமான சாலைவிதிகளுடன் அதிவேகமாக செல்லுவோரை படம் பிடிக்கும் ரோடார் கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாக வாகனத்தை செலுத்துவோர் கேமராக்கள் அருகே வரும் போது வேகத்தை குறைத்து நல்ல பிள்ளையாக வாகனத்தை ஓட்டிச்செல்வர் பின்னர் மீண்டும் தலைதெறிக்க வேகமெடுக்கும் வாகனம் அடுத்த கேமராவை பார்க்கும் போது தான் 'பம்மும்'. இப்படியாக, ரேடார் கேமராவுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையில் நடைபெறும் 'டாம் அன்ட் ஜெர்ரி' விளையாட்டுக்களை கட்டுப்படுத்த இதோ வந்துவிட்டது புதிய தொழிற்நுட்பம்.

அதாவது, ஒரு ரேடார் கேமராவிலிருந்து அடுத்த கேமிரா இருக்குமிடத்திற்கு எவ்வளவு வேகத்தில் வந்திருப்பார் என்ற தூரத்தையும் நேரத்தையும் வேகத்தையும் 'கூட்டி கழித்து கணக்கு போட்டு' பிடிக்கும் வைட்ரோனிக் அல்லது புருஜ் ரேடார் (Vitronic or Burj Radar) என அழைக்கப்படும் புதிய தொழிற்நுட்பத்தை விரைவில் துபையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர் ஆனால் எப்போது முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறதென சொல்லப்படவில்லை எனவே, அதுவரை டேஞ்சரஸ் என்ஜாய்.



Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.