Breaking News
recent

தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது வேகக்கட்டுப்பாட்டு கருவி இனி கட்டாயம்.!


இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மத்திய மோட்டார் வாகன விதிகளில் மேற்கொண்ட திருத்தத்தின்படி குறிப்பிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ. இதில் 9 இருக்கைகளுக்கு மேல் உள்ள அனைத்து பயணிகள் வாகனங்களும், 3 ஆயிரம் கிலோ எடையில் தொடங்கும் அனைத்து சரக்கு வாகனங்களும் அடங்கும். 

இந்த வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும்.இந்த புதிய விதியின்படி அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் அதன் உரிமையாளர்கள் ஜூலை 31ம் தேதிக்கு முன்பாக வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

பின்னர் அதற்கான காலஅவகாசம் அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கான கெடு நேற்றுடன் முடிந்தது.

 இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் நேற்று வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தாமல் எப்சிக்கு வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. 

வேலூர் ஆர்டிஓ அலுவலகத்திலும் கருவி பொருத்தாமல் எப்சிக்கு வந்த வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘இந்தியா முழுவதும் சரக்கு வாகனங்கள், பயணிகள் வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

அதற்கான கால அவகாசம் அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. எனவே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தாமல் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகத்திற்கு எப்சி புதுப்பிக்க வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.. 

இனி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தி வந்தால்தான் எப்சி புதுப்பிக்கப்படும்’ என்றார்.  
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.