Breaking News
recent

வாட்ஸ்அப் வீடியோ காலிங் பயன்படுத்துவோர் கவனத்துக்கு.!


வாட்ஸ்அப் வீடியோ காலிங்-ஐ ஆக்டிவேட் செய்ய இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள் என்று உங்கள் ஃபோனுக்கு குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருங்கள். ஏனென்றால், வாட்ஸ்அப் நிறுவனம் அதை அனுப்புவதில்லை. உங்களிடம் இருந்து விவரங்களை திருட நினைப்பவர்கள் அந்த குறுஞ்செய்தியை அனுப்பி இருக்கலாம்.

வாட்ஸ்அப் நிறுவனம், கடந்த 15-ம் தேதி வீடியோ காலிங் வசதியை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்அப், வாய்ஸ் காலிங்-ஐ அறிமுகம் செய்தபோது, அதை ஆக்டிவேட் செய்ய குறுஞ்செய்திகளை அனுப்பியது. ஆனால், வீடியோ காலிங்-ஐ பொறுத்தவரை, ஏற்கெனவே ஃபோனில் இருக்கும் வாட்ஸ்அப் செயலியை, அப்டேட் செய்தாலே போதுமானது. 

வீடியோ காலிங் அல்லது 'குரூப் வீடியோ காலிங்' ஆக்டிவேட் செய்ய குறுஞ்செய்தி வந்தால் அதை தவிர்ப்பது சிறந்தது எனக் கூறப்படுகிறது. காரணம், குறுஞ்செய்தியில் வரும் லிங்க்-ஐ கிளிக் செய்யும் பட்சத்தில், அது ஹேக்கர்களின் இணையதளத்துக்கு இட்டுச் சென்று, கடவுச்சொல் மற்றும் ஃபோனில் இருக்கும் பிற விஷங்களைத் திருடச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.