Breaking News
recent

துபாய் தூதரகத்தில் காந்தி நினைவு மையம்.!


துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் மகாத்மா காந்திக்கு நினைவு மையம் அமைக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
துபாயின் இந்தியாவிற்கான தூதரக அதிகாரி அனுராக் பூஷன் இதுகுறித்து கூறுகையில், காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது பணிகளை உணர்த்தும் வகையில் இந்த கலாச்சார மையம் அமைக்கப்பட உள்ளது. துபாய் அரசுடன் இணைந்து இந்த மையத்தை அமைப்பது மகிழ்ச்சிகரமாக உள்ளது. 
இது ஒரு சிறு அடிதான். இந்த முதல் முயற்சி பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வரும் என நம்புகிறேன்.
இலக்கியம், கலைகள் மற்றும் கதர் ஆடையை பரப்பும் அடையாளமாக இந்த மையம் அமைக்கப்பட உள்ளது. 
இதன் மூலம் நமது இளைய தலைமுறையினர் நமது தேச தந்தை குறித்து தெரிந்து கொள்ளவும், அவர்கள் ஊக்கம் பெறவும் வகையில் இருக்கும் என்றார்.
கொண்டாடுகிறோம்:  சர்தார் பட்டேலின் 141வது பிறந்த தின விழாவில், தூதரகத்தில் காந்தி சிலை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டிய பிறகு இந்தியர்களிடையே பேசிய அனுராக் பூஷன் , முதலில் காந்தியின் கொள்கைகளை பரப்பும் வகையில் அவரது சிலை மட்டும் நிறுவவே முதலில் எண்ணினோம். 
பிறகு காந்தியின் மதிப்பை அனைவரும் அறிய செய்யம் வகையில் காந்திக்கு நினைவு மையம் அமைக்கும் யோசனைக்கு ஒப்புக் கொண்டோம். காந்தியை நாம் கொண்டாடுகிறோமே தவிர, அவரது நல்லொழுக்கங்களையும் கொள்கைகளையும் வணங்கவில்லை என தெரிவித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.