Breaking News
recent

அபுதாபி வர்த்தகக் கண்காட்சியில் நவீன ரோபோ கார்கள் அறிமுகம்.!


அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் நேற்று 23.11.16 புதன்கிழமை துவங்கி 26.11.16 சனிக்கிழமை வரை நடைபெறும் BBT - Big Boys Toys எனும் வர்த்தக கண்காட்சியில் உலகெங்கிருமிருந்து சுமார் 200க்கு மேற்பட்ட அலங்கார பொருட்கள், புதுமை கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் நிகர மதிப்பு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.

டிரான்ஸ்பார்மர்ஸ் (Transformers) எனும் ஆங்கில சினிமாவில் ரோபோக்கள் கார்களாக மாறுவது போன்று BMW நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு லெட்ரோன்ஸ் (Letrons) எனப் பெயரிடப்பட்டுள்ள, சுமார் 30 நொடிகளில் உரு மாறும் ரோபோ காரை அறிமுகப்படுத்தியுள்ளது, விலை அதிகமில்லை 6 லட்சம் டாலர்கள் தான்.

மேலும், உலகின் அதிவேக MTT 420 RR ரக பைக்குகள், ராணுவ ஜெட் விமான தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த கார்கள், ஜெட் எஞ்சின் பொருத்தப்பட்ட Flaris ரக குட்டி விமானம் இவற்றுடன் உயரமான கட்டிட ஜன்னல்களை சுத்தம் செய்யும் ரோபோக்கள், ஜெல்லி மீன் தொட்டிகள், பந்தயக் கார் வடிவில் அமைக்கப்பட்ட படகு, நீருக்கு அடியில் செல்ல பெங்குயின் வடிவ நீர்முழ்கிகள், புதிய கேட்ஜெட்டுகள், எலக்ட்ரானிக் பொருட்கள் என இன்னும் பல... பல...

39 நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வருகை தரும் இந்த கண்காட்சியை நீங்களும் காண வேண்டும் எனில் 300 திர்ஹம் மட்டுமே நுழைவு கட்டணம்.

பதஞ்சலி பிராண்டு பெயரில் கூடிய விரைவில் இவை எல்லாம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் போது பார்த்துக்கிடலாம்! ரோபோவுக்கும் பாபா வெளம்பரம் கண்டிப்பா உண்டுங்க!

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.