Breaking News
recent

வேலைவாய்ப்பிற்காக சவூதி அரேபியா செல்ல இருக்கின்றீா்களா! போகு முன் இதனைக் கட்டாயம் படியுங்கள்.!


நேற்று முன்தினம்(03-11-2016) சவுதி விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட மருந்து வகைகளை எடுத்துவந்த இரண்டு இந்தியர்கள் உட்பட நான்கு பேர் கைது.  

இவர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்த மற்றோரு இந்தியர் UP-ஐ சேர்ந்தவர் இவர்களை தவிர இரண்டு வங்காளதேச நபர்களுக்கு கைது செய்யப்பட்டனர்.

இவர்களை அனைவரையும் அதிகாரிகள்சிறப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த மாதத்தில் இது மூன்றாவது முறை இந்தியர்கள் இப்படி பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எந்தெந்த மருந்து வகைகள் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டவை என்பது தெளாவாக தெரியாத நிலையில் முடிந்த வரையில் மருந்து வகைகளை எடுத்து வருவது தவிர்ப்பது நல்லது என்று வளைகுடாவில் உள்ள சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.

கைது செய்யப்பட்ட இந்தியர் தன்னுடைய நண்பர் அவர்கள் உறவினருக்கு வழங்கஇவைகளை கொடுத்து அனுப்பியதாக எவ்வளவு எடுத்து கூறியும் எந்த பலனும் இல்லை என்று நேரில் பார்த்த சில இந்தியர்கள் MediaOne செய்தியாளரிடம் கூறினார்.

கைப்பற்றப்பட்ட மருந்து வகைகளை ஆய்வுக்காக அதிகாரிகள் அனுப்பி உள்ளனர். ஆய்வு முடிவில் தான் இவர்களுடைய தண்டனை வெளியிடப்படும்.

(குறிப்பாக வெளிநாடு செல்கின்றவா்களிடம் அவா்களது உறவினா் பொருட்களை அனுப்புவது வழக்கம். 

ஆனால் அவா்கள் அனுப்பும் சில மருந்துப் பொருட்கள் குறிப்பிட்ட நாடுகளில் தடைசெய்யப்பட்டதாக இருக்கலாம். 

அவ்வாறான சந்தா்ப்பத்தில் கொண்டு வந்த நபரே தண்டனையை எதிா் கொள்ள நேரிடும். ஆகவே இந்த விசயத்தில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டுக் கொள்ளுங்கள்.)
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.