Breaking News
recent

துபாயில் பல லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட‌ உலகின் மிகபெரிய மாதிரி மலர் விமானம்.!


துபாயில் பாலைவன சோலையாக திகழும்  மிராக்கிள் கார்டன் எனப்படும் லட்சக்கணக்கான பூக்களோடு கூடிய‌ மலர் பூங்கா அமைந்துள்ளது. 

இவ்வருட சீசனில் இப்பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வகையில் 500 ஆயிரம் மலர்களால் எமிரேட்ஸ் 380 மாதிரி விமானம் வடிவமைக்கபட்டுள்ளது. 

இப்பூங்காவில் மலர்களால் ஆன வாகனங்கள் ஆண்டுதோறும் இடம்பெற்றாலும் எமிரேட்ஸ் ஏ 380 ஜம்போ ஜெட் போன்ற வடிவமைப்பில் மலர்களால் பிரம்மாண்ட  மாதிரி விமானம் உருவாக்கியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடமிருந்து  ஏ 380 விமானத்தின் மாதிரி வரைபடம் பெறப்பட்டு அதனை அடிப்படையாக வைத்து 200 பணியாளர்களை கொண்டு இரும்பு கம்பிகள் மூலம் வெளிப்புற தோற்றம் உருவாக்கப்பட்டது. 

பின்னர் அதில் செடி கொடிகள் வளர்வதற்கு ஏற்ற சூழல் ஏற்படுத்தப்பட்டு இதில் இறக்கை பகுதிகள்  போன்று ஏற்படுத்தப்பட்டு இன்ஜின் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.பின்னர் மேல் பகுதியில் கொடி வகையிலான தாவரங்கள் அதில் வளர்க்கப்பட்டது.

பின்னர் விமானம் முழுவது 5 லட்சம் மலர்களால்  விமான அலங்கரிக்கப்பட்டு மலர் விமானமாக கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கிறது. 

நிஜ விமானத்தின் எடை 500 டன்களாகும் இந்த மலர் விமானம் 100 டன் எடையுள்ளதாக உள்ளது.வரும் 27ந்தேதி மிராக்கிள் கார்டன் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.