Breaking News
recent

சவுதியில் புலி தாக்கி சிறுமி காயம்.!


சவுதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள 'சகாகா' எனும் ஊரில் 'வளர்ப்பு புலி' ஒன்றை வைத்து நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சி நடத்தியபோது அங்கு வேடிக்கை பார்க்க வந்திருந்த சிறுமி ஒருவரை புலி திடீரென பாய்ந்து தாக்கியது. எனினும், பயிற்சியாளரின் உதவியால் காயங்களுடன் சிறுமி காப்பற்றப்பட்டார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு குறைபாடுகளுடன் நிகழ்ச்சி நடத்தியதற்காக கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், என்ன தான் காட்டு மிருகங்களை மனிதர்கள் பழக்கினால் அதன் இயற்கை குணங்களை மாற்ற முடியாது என்றும் காட்டு மிருகங்களை தனிமனிதர்கள் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கும் தடை வேண்டும் எனவும் குரல்கள் எழும்பத் துவங்கியுள்ளன.

2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியை காண வந்த 5 வயது சிறுவன் ஒருவன் தன் பெற்றோர் முன்பே சர்க்கஸ் சிறுத்தையால் (காட்டில் மிருகங்கள் வேட்டையாடும் போது கழுத்தை பிடிக்கும் அதேமுறையில்) கழுத்தில் தாக்கப்பட்டு பின் பெரும் முயற்சிக்குப் பின் மீட்கப்பட்டான்.

மார்ச் மாதம், குவைத் நாட்டை சேர்ந்த ஒருவர் தனது சவுதி நண்பரின் வீட்டுக்கு விருந்தினராக வந்த இடத்தில் அந்த சவுதியர் வளர்த்த பெண் சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

அதேபோல் 2014 டிசம்பர் மாதம், குவைத் நாட்டவர் ஒருவர் வளர்த்து வந்த சிங்கத்தால் தாக்கப்பட்டு பிலிப்பைன்ஸை சேர்ந்த வீட்டுப்பணிப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அந்தக் காலத்தில் அரசர்களும், செல்வந்தர்களும் காட்டு மிருகங்களை வேட்டையாடி கொன்று தங்களது அரண்மனைகளை அலங்கரிப்பதை தங்களின் அந்தஸ்தை போற்றும் செயலாக கருதியதை போலவே காட்டு மிருகங்களை வீட்டில் வளர்ப்பதை தற்கால வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பெரும் செலவந்தர்கள் கருதுகின்றனர்.

மேலும், இன்றைய சமூக வலைத்தளங்களும் இத்ததைய சட்டவிரோத மிருகக் கடத்தல், விளம்பரம் மற்றும் விற்பனைக்கு பெரும் துணைபுரிகின்றன என்பதால் வளைகுடா நாடுகள் அனைத்தும் காட்டு மிருகளை வீட்டில் வளர்ப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் பலமாக எழுந்துள்ளன.

இந்த விஷயத்தில் அமீரகம் ஏற்கனவே முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. காட்டு மிருகங்களின் வளர்ப்பை தடை செய்துள்ளதுடன் அவற்றை கைப்பற்றியும் வருகிறது.

இது என்ன பிரமாதம்! எங்க இந்தியாவுல காட்டு மிருகம் தாக்கித்தான் உயிர் போகனும்னு இல்ல, பேங்க் வாசல் லைன்ல நின்னாலே உயிரு போயிறும்னு நீங்க சொல்றதும் சரி தான்னு மனிதர்கள் உணர்வார்கள், மாடுகள் உணருமா?

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.