Breaking News
recent

சென்னை விமான நிலையம் முற்றுகை: இந்திய தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு.!


பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 அன்று சென்னை விமான நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் தலைமையில் 6.11.16 அன்று நடைபெற்றது.அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் :
1. பொது சிவில் சட்டத்திற்கான உடனடி முயற்சியை இந்த செயற்குழு கண்டிப்பதோடு மத்திய அரசு இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும்.முஸ்லிம் தனியார் சட்டத்தில் தேவையில்லாமல் அது தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
2. "கவ் ரக்ஷக்' என்ற பெயரில் சிறுபான்மையினர் மற்றும் தலித்கள் மீதும் தாக்குதல் நடத்தி வரும் சமூக விரோத கும்பலை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். இந்த கும்பலுக்கு பாஜக ஆளும் மாநில அரசுகளும் - காவல்துறையும் உறுதுணையாக இருப்பதை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
3. போபாலில் எட்டு முஸ்லிம் கைதிகள் என்கவுண்ட்டர் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நீதி விசாரணையில்லாமல் நடந்த இந்த படுகொலைகள் அப்பட்டமான அரச பயங்கரவாதமாகும்.இந்த என்கவுண்ட்டர் கொலை சம்பவத்தில் நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

இந்தப் படுகொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸôர் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் ஆகியோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
4. முத்தலாக் போன்ற சாதாரண வழக்குகளை கூட "சுவோ மோட்டோ' வழக்காக எடுத்துக் கொள்ளும் உச்ச நீதிமன்றம் போபால் என்கவுண்ட்டர் சம்பவத்தையும் சுவோ மோட்டோ வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என இச்செயற்குழு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறது.
5. பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி எதிர்வரும் டிசம்பர் 6 அன்று இன்ஷா அல்லாஹ் சென்னையில் விமான நிலைய முற்றுகைப் போராட்டம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன் வீரியமிக்க போராட்டங்களை நடத்துவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
6. 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழகச் சிறைகளில் சிறைபட்டிருக்கும் தண்டனைக் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
7. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இதுவரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதிகள் பிற சமய மக்களிடம் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிகமான தமிழாக்கப் பிரதிகளை பிற சமய மக்களிடம் சேர்க்க இச்செயற்குழு உறுதி ஏற்கிறது.

அதோடு, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் துவங்கப்பட்ட திருக்குர்ஆன் மொழியாக்கம் செய்யும் பணி இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் மாதம் நிறைவு பெறும் என்பதை இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
8. வேலூர் மாவட்டம் ஆம்பூரில் காவல்துறை விசாரணையில் துன்புறுத்தப்பட்டு மரணமடைந்த ஷமீல் பாஷா குடும்பத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.