Breaking News
recent

உலகின் மிகக் குறுகிய தூர விமான சேவையில் ஓர் சாதனை.!


பிரிட்டீஷ் அரசுக்கு சொந்தமான, ஸ்காட்லாந்தின் வடகிழக்கு கடற்பகுதியில் அமைந்துள்ள ஆர்க்னி தீவு (Orkney) கூட்டத்தின் 2 குட்டித்தீவுகளான வெஸ்ட்ரே (Westray) மற்றும் பாப்பா வெஸ்ட்ரே (Papa Westray) இடையே பறக்கும் குட்டி விமானம் தனது 10 லட்சமாவது (1 மில்லியன்) பயணியை சுமந்து சென்று சாதனை படைத்தது.

இன்னும் படிங்க! ஸ்காட்லாந்தின் லோகான் ஏர் (Logan Air) நிறுவனத்தால் 1967 ஆம் ஆண்டு முதல் பறக்கும் இந்த விமானத்தின் மொத்த இருக்கையே 8 தான். இதில் 10,000 முறையாக பயணம் செய்த தி ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்தின் வங்கி ஊழியர் அன்னி ரேண்டல் என்ற பயணியும் இந்த சாதனை பயணத்தின் போது கௌரவிக்கப்பட்டார்.

சுமார் 2.7 கி.மீ. (1.7 மைல்) தூரமேயுள்ள இந்த விமான பயணம் 2 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் மேலும் பலமான காற்றடித்தால் 47 நொடிகளிலேயே தரையிறங்கிவிடுமாம்

ஆர்க்னி தீவுக்கூட்டங்களின் விமான நிலையங்களை சுற்றி வந்து இணைக்கும் இந்த விமான சேவையை ஆசிரியர்கள், மாணவர்கள், காவலர்கள், மருத்துவர்கள் போன்றோரே அதிகமாக பயன்படுத்துகிறார்களாம்.

Source: Emirates 247
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.