Breaking News
recent

சவூதியிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் ஆயுள் முழுவதும் சவூதி வரத் தடை.!


சவூதியிலிருந்து  நாடு கடத்தப்படுபவர்கள் ஆயுள் முழுவதும் சவூதி வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவிற்கு விசிட் விசவிலோ அல்லது உமரா விசாவிலோ வந்து விசா காலம் முடிந்த பின்பும் திரும்ப சொந்த நாட்டுக்கு செல்லாமல் இருப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும் ஸ்பான்சரை விட்டு ஓடி வந்து வேறு இடங்களில் வேலை செய்வதும் சட்டப்படி குற்றமாகும்

இந்நிலையில் அவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருந்து ஹுரூப் மூலம் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படுபவர்கள் மீண்டும் சவூதி அரேபியாவிற்கு ஆயுள் முழுதும் வர தடை விதிக்கப்படுவதாக சவூதி குடியுரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவூதியின் நாளிதழ்களில் ஒன்றான் அல் மதீனா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் , மக்கா பாஸ்போர் அதிகாரி கலஃபுல்லாஹ் அல் துவைரி இதுகுறித்து தெரிவிக்கையில், கடந்த வருடன் சட்டவிரோதமாக சவூதியில் தங்கியிருந்தவர்கள் 4 லட்சத்தி 80 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்ததாக அல் மதீனா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களுக்கு உதவுவதும் குற்றமாகும். அவ்வாறு உதவியவர்களில் 16386 பேர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாகவும். சவூதி நாட்டவராயின் சிறைத்தண்டனையும் மற்றும் அபராதமும் வழங்கப்பட்டதாகவும் அல்மதீனா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களும் கடும் சட்ட நடவடிக்கைகளுகு உட்படுத்தப்படும் எனபது குறிப்பிடத்தக்கது.

http://www.albawaba.com/business/absconding-expat-workers-risk-fines-lifetime-bans-saudi-arabia-904304
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.