Breaking News
recent

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து.!


நாடு முழுவதுமுள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உரிய சில்லறை கிடைக்காமல் நாடு முழுவதுமுள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைப் பார்க்க முடிந்தது. 
இதையடுத்து, சுங்கச் சாவடிகளில் ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நவம்பர் 11ம் தேதி வரை வாங்கப்படும் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் சுங்கச்சாவடிகளில் முழுமையாக சென்று சேராதநிலையில் சுங்கச்சாவடி வரிசை குறையவில்லை என்ற புகார் எழுந்தது.
இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும்நிலையில், நாடுமுழுவதுமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். வாகன போக்குவரத்து தடையின்றி நடக்க ஏதுவாக சுங்கக் கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.