Breaking News
recent

முதன் முதலாக காந்தி படம் இல்லாத இந்திய ரூபா.!


காந்தி படம் அச்சிடாத 2000 ரூபாய் நோட்டுகளை இந்திய மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளால் இந்தியாவில் கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கம் அதிகமாகிவிட்டதாகவும், இதனால் அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி மைசூர் கரன்சி அச்சகத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும், விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் தற்போது அச்சடிக்கப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இல்லை என்றும் கூறப்படுகிறது. 

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளால் மத்திய அரசு எத்தனை கவனமாக இருந்தும் கள்ள நோட்டு மற்றும் கருப்புப்பணத்தை ஒழிக்க முடியாத நிலையில், 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிட்டால் இந்திய பொருளாதாரம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.