Breaking News
recent

வருகின்ற சனி, ஞாயிறு வங்கிகள் வழக்கம் போல செயல்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!


கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். மேலும், இருப்பு வைத்துள்ள இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறினார். 

ஆனால், இன்று வங்கிகள் விடுமுறை. ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை. இதனால், பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அவஸ்தைப்பட்டனர். பெரும்பாலான கடைகளில் இந்த ரூபாய் நோட்டுகளை வாங்காததால் அத்யாவசிய பொருட்களை வாங்குவதில் கடும் சிரமங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2-வது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக இருந்து வருகிறது. இந்நிலையில் 2-வது சனிக்கிழமை என்றாலும் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.