Breaking News
recent

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ‘செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்தியாவுக்கு தான் வர வேண்டும்’ வங்கி அதிகாரிகள் விளக்கம்.!


வெளிநாடுகளில் வசிப்பவர்கள் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்தியாவிற்கு தான் வர வேண்டும்’ என வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.வெளிநாட்டினருக்கு சிக்கல்

மத்திய அரசு 8–ந்தேதி இரவு முதல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.

ஆனால் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் இந்திய வங்கிகள் அதை மாற்றி கொடுக்க மறுத்து விட்டன. இதனால் அவர்கள் அதை மாற்ற இந்தியா வர வேண்டியகட்டாயம்ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் விளக்கம்

இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வெளிநாடுகளில் செயல்படும் இந்திய வங்கி கிளைகள் அங்கு இந்திய பண பரிமாற்றங்களில் ஈடுபடுவதில்லை. செல்லாத இந்திய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுக்க அதிகாரமும் அந்த வங்கிகளுக்கு கிடையாது. 

அவை அந்த நாட்டு பணம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பணங்களை மட்டுமே பெறுகின்றன. எனவே வெளிநாடுகளில் வசிப்பவர்கள் செல்லாத நோட்டுகளை மாற்ற இந்தியாவிற்கு தான் வர வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர் ஒருவர் கூறும்போது, ‘‘என்னிடம் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரூ.22 ஆயிரம் உள்ளது. 

இந்தியா செல்லும் போது செலவுக்கு தேவைப்படும் என வைத்திருந்தேன். இதை எப்படி மாற்றுவது என தெரியவில்லை. 

இதற்காக இந்தியா வந்து சென்றால் பல மடங்கு செலவு தான் ஏற்படும். எனவே இந்த விவகாரத்தில் இந்திய ரிசர்வ் வங்கி எங்களுக்கு உதவ வேண்டும்’’ என்றார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.