Breaking News
recent

விமானத்தில் வழங்கப்படும் உணவு உப்பு சப்பில்லாமல் இருப்பது ஏன்?


இன்றளவும் மனித கண்டுபிடிப்புகளில் உன்னதமானதாகவும், புரட்சிகரமானதாகவும் விமானங்கள் கருதப்படுகின்றன. 

இந்த நிலையில், தரையில் வாகனங்களில் பயணிப்பதற்கும் விமானத்தில் பயணிப்பதற்கும் பல்வேறு வேறுபாடுகள் உண்டு.

அடிக்கடி பயணிப்பவர்கள் உணரும் சில வேறுபாடுகளும், அதற்கான காரணங்களையும், அத்துடன் சில சுவாரஸ்யங்களையும்  காணலாம்.

கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ள கர்மன் கற்பனை கோடுதான் விண்வெளியை தொடும் ஆரம்ப புள்ளியாக கருதப்படுகிறது. 

மேலும், அந்த உயரத்தை தொட்டவர்களை சர்வதேச விமானவியல் கூட்டமைப்பு விண்வெளி வீரர்களாக கூறுகிறது. 

ஆனால், ஒவ்வொரு விமானப் பயணியும் இந்த உயரத்தில் 10 சதவீதத்தை, அதாவது 10 கிமீ தூரத்தை ஒவ்வொரு பயணத்தின்போதும் தொட்டு வருகின்றனர்.

நீண்ட தூரம் விமானத்தில் பயணிக்கும்போது அதில் கொடுக்கப்படும் உணவுகளை தவிர்க்க முடியாது. ஆனால், அதன் சுவை வேறு மாதிரியும், சில நேரம் உப்பு சப்பில்லாதது போல தோன்றும். 

அதற்கு காரணம், விமானம் அதிக உயரத்தில் பறக்கும்போது நுகர்வு திறுனும், சுவை உணரும் திறனும் குறையும். உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளை உணரும் சக்தி நாவிற்கு குறைந்துவிடும்.

அதிக உயரத்தில் பறக்கும்போது விமானத்தின் உள்பகுதியில் ஈரப்பதம் வெகுவாக குறைவதும், காற்றழுத்தம் குறைவாக இருப்பதுமே இதுபோன்ற சுவை உணர் திறன் குறைவதற்கு காரணம். இதற்காக, விமானத்தில் வழங்கப்படும் உணவுகளில் கூடுதல் உப்பு மற்றும் காரம் சேர்க்கப்படுவது வழக்கமாம்.

 மேலும், கேபினில் உள்ள காற்றழுத்தம் காரணமாக உணவு பாதிக்கப்படாமல் இருக்க பேக்கேஜ் செய்து குளிரூட்டப்பட்டு, பரிமாறும்போது வெப்ப்படுத்தி கொடுக்கின்றனர். மேலை நாடுகளில் வழங்கப்படும் பல உணவுகளில் தக்காளி சாஸ் தடவி கொடுப்பது வழக்கம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.