Breaking News
recent

துபாய் - அபுதாபி நெடுஞ்சாலையில் டிரைவர் இல்லா வாகன பரிசோதனை வெற்றி.!


எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் துபையின் 25 சதவிகித போக்குவரத்தை ஓட்டுனர் இல்லா வாகனங்கள் மூலம் இயக்க திட்டமிடப்பட்டு வரும் நிலையில் துபை பிஸ்னஸ் பே பகுதியில் EZ10 என்ற டிரைவரில்லா வாகனம் தொடர்ந்து சோதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், துபை போக்குவரத்து துறையின் (RTA) ஒத்துழைப்புடன் பிரசித்திபெற்ற மெர்ஸிடஸ் கார் நிறுவனம் E-300 எனும் தனது டிரைவர் இல்லா வாகனத்தை துபை ஜெபல் அலியிலிருந்து அபுதாபி நகரின் மத்திய பகுதிவரை இயக்கி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

இந்த காரை இயக்குவதற்கு ஸ்டியரிங், ஆக்ஸிலேட்டர், பிரேக் என எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் லேன் மாறுவதற்கு மட்டுமே இன்டிகேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பரபரப்பு நிறைந்த துபை அபுதாபி நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட இந்த சோதனையின் வெற்றி டிரைவர் இல்லா வாகனத்திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Source: 7 Days
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.