Breaking News
recent

அமீரக வானிலை முன்னறிவிப்பு: புழுதிக் காற்றுடன் மழை பெய்யும்.!


அமீரக தேசிய வானிலை மையத்தின் முன்னறிவிப்பின்படி எதிர்வரும் 3 நாட்களுக்கு நாட்டின் வட பகுதிகளான ஷார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா ஆகிய எமிரேட்டுகளில் பலத்த புழுதிக் காற்றைத் தொடர்ந்து மழை பெய்யும் என அறிவித்துள்ளது. எனவே, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புள்ளோர் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

துபை மற்றும் ஓமன் பகுதிகளில் கடல் பலமாக ஆர்ப்பரிப்பதுடன் சுமார் 7 அடி முதல் 10 அடி வரை அலைகளும் எழும். அதேவேளை துபை, அபுதாபி மற்றும் ராஸ் கைமா கடற் பிரதேசங்களில் அதிகமாக மழை பெய்யும் என்றாலும் நகருக்குள்ளும் அதன் தாக்கமிருக்கும்.

பனி மூட்டமும் அதிகரித்து காணப்படும் அதேவேளையில் தட்பவெப்பம் கடற்கரை பிரதேசங்களில் 28 டிகிரி முதல் 30 டிகிரி செல்ஷியஸ் வரையும், நகருக்குள் 30 டிகிரி முதல் 32 டிகிரி வரையும், மலைப் பிரதேசங்களில் 23 டிகிரி முதல் 26 டிகிரி செல்ஷியஸ் வரை நிலவும் என்றும் அறிவித்துள்ளது.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.